விஜய்தான் முதல்வர்; மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல என்று ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டப்பேரவை மட்டுமே. இதுகுறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக உள்ளன.
தனிப்பெரும் கட்சியான தவெக தலைவர் விஜய்யை மக்கள் முதல்வர் என்று முடிவுசெய்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல. மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு இந்த அளவிற்கு அரசியலும், அரசியல் சாசன விதிகளும் தெரியும் என்று நம்புகிறேன்.
பாஜக ஆளுநர் மாளிகை வழியாக அரசியல் செய்வதை உடனே நிறுத்தவேண்டும். மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தவெக தலைவர் விஜய்யை உடனடியாக ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியான நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் தனிப்பெரும்பான்மை இல்லாததால் சிறிய கட்சிகளின் ஆதரவைக் கோரியிருந்தது.
ஆட்சியமைக்க ஆதரவு கோரி தவெக தலைவர் விஜய் கேட்டுக்கொண்டதன் பேரில் தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் தேசிய தலைமை ஆதரவு தெரிவித்துள்ளது. வரும் தேர்தல்களிலும் இந்தக் கூட்டணி தொடரும் என்றும் அதே நேரத்தில் மதவாத சக்திகளுடன் ஒருபோதும் கூட்டணி வைக்கக்கூடாது என்ற நிபந்தனையையும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
MP Jothimani has stated that Vijay is the Chief Minister, and that it is not right for the Governor to stand in the way of the people's verdict.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் எவ்வளவு நேரம் பேசினார்?
சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
காங்கிரஸில் ஊழல்... வேட்பாளர் தேர்வில் முறைகேடு! ஜோதிமணி எம்.பி. பரபரப்பு குற்றச்சாட்டு!

“குதிரை பேர அரசியலை யார் நியாயப்படுத்தினாலும் தவறானது” - ஜோதிமணி எம்.பி.
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



