தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தமிழ்நாட்டின் முதல்வராக நாளை காலை பதவியேற்கிறார் விஜய்!

நாளை காலை 10 மணிக்கு சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டரங்கில் பதவியேற்பு விழா

News image

விஜய் - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

தமிழ்நாட்டின் முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை (மே 10) காலை 10 மணிக்கு பதவியேற்பார் என ஆளுநர் மாளிகை இன்று (மே 9) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் விஜய்க்கு தமிழக ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். விஜய்யுடன் சேர்ந்து 9 அமைச்சர்களும் நாளையே பதவியேற்பார்கள் என தவெக வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

நாளையே விழா நடத்த வேண்டும் என்று விஜய் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆட்சியமைக்க 118 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில் 120 பேரின் ஆதரவு கிடைத்ததால் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராகிறார்.

விஜய்க்கு முதல்வராக, தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்துவைக்க உள்ளார். இதனிடையே பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததையடுத்து ஆளுநர் அர்லேகரை சந்தித்து தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை உரிமை கோரினார்.

விஜய்யுடன், காங்கிரஸ் தலைவர்கள் பிரவீன் சக்கரவர்த்தி, கிரிஷ் சோடங்கர், விசிக எம்.எல்.ஏ. வன்னி அரசு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ.க்கள் இருவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், தவெக நிர்வாகிகள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்டோரும் ஆளுநரைச் சந்தித்தனர்.

ஏற்கெனவே 3 முறை தமிழக பொறுப்பு ஆளுநரைச் சந்தித்த விஜய் 4ஆவது முறையாக இன்று மீண்டும் சந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கை

ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கை

Summary

Information has emerged that TVK leader Vijay is set to take office as the Chief Minister of Tamil Nadu tomorrow at 10 PM.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.