பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

தமிழ்நாட்டின் எல்லைச்சாமி யார்? ஆ. ராசா

தமிழ்நாட்டின் எல்லைச்சாமியாக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக திமுக எம்.பி. ஆ. ராசா கூறியுள்ளார்.

A Raja

ஆ. ராசா - கோப்புப் படம்

Published On :

தமிழ்நாட்டின் எல்லைச்சாமியாக முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக திமுக எம்.பி. ஆ. ராசா கூறியுள்ளார்.

சென்னை பூந்தமல்லியில் திமுக தேர்தல் பிரசாரத்தில் ஆ. ராசா எம்.பி. பேசுகையில், "தமிழ்நாட்டின் உரிமைக்காக எப்படி அண்ணா போராடினாரோ, அதேபோல பிகாரின் உரிமைக்காகப் போராடிய நிதிஷ் குமார் இன்று காணாமல் போய்விட்டார். மராத்திய பெருமை பேசியவர்கள் இன்றில்லை. உத்தர பிரதேசத்தை பிடித்து விட்டனர், மத்திய பிரதேசத்தை பிடித்து விட்டனர்.

இப்படி மேலிருந்து ஒவ்வொன்றாக, தில்லியிலிருந்து பிடித்துக்கொண்டு வருகின்றனர். இந்துத்துவா, ஜெய் ஸ்ரீராம், பாரத மாதா கீ ஜே என்றெல்லாம் சொல்லிக்கொண்டே வருகின்றனர்.

எங்கெல்லாம் முடியவில்லையோ, அங்கெல்லாம் தோளின் மீது ஏறிக் கொள்கின்றனர். ஆந்திரத்தில் முடியவில்லை என்பதால், சந்திரபாபு நாயுடு தோளில் ஏறிவிட்டனர். அதேபோல, திருத்தணி வரையில் வந்து விட்டனர்.

ஆனால், அங்குதான் உள்ளே விடாமல் எல்லைச் சாமியாக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நிற்கிறார். இவர் தனியொரு ஆள் இல்லை - இவர் பின்னால் அண்ணா, கருணாநிதி என ஒரு தத்துவமிருப்பதாகப் புரிந்து கொள்கின்றனர்.

அதன் பின்னர்தான், தமிழ்நாட்டிலிருந்து ஒரு இளிச்சவாயனை கண்டுபிடிக்கின்றனர். அவர்தான் எடப்பாடி பழனிசாமி. அவர் தோளில் ஏறி, ஒளிந்து ஒளிந்து வருகின்றனர்.

ஆனால், இது அண்ணா ரத்தம்; கருணாநிதி ரத்தம். ஆகையால், இங்கே உள்ளே வர முடியாது" என்று தெரிவித்தார்.

Summary

DMK MP A. Raja has stated that Chief Minister MK Stalin serves as the guardian deity of Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.