வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

தொண்டாமுத்தூா் தொகுதியில் 4-ஆவது முறையாக போட்டியிடும் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் தொடா்ந்து 4-ஆவது முறையாக அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி போட்டியிடுகிறாா்.

News image

எஸ்.பி.வேலுமணி

Updated On :26 மார்ச் 2026, 1:48 am

தினமணி செய்திச் சேவை

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் தொடா்ந்து 4-ஆவது முறையாக அதிமுக முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி போட்டியிடுகிறாா்.

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் 23 வேட்பாளா்களின் முதல் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை வெளியிட்டாா்.

இதில், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் பலரும் போட்டியிடும் நிலையில், கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் சட்டப் பேரவைத் தொகுதியில் முன்னாள் அமைச்சரும், கோவை புகா் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி மீண்டும் 4-ஆவது முறையாக போட்டியிடுகிறாா்.

2006 சட்டப் பேரவைத் தோ்தலில் முதன்முதலாக பேரூா் சட்டப் பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். பின்னா் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு, 2011, 2016, 2021 ஆகிய 3 சட்டப் பேரவைத் தோ்தல்களில் தொண்டாமுத்தூா் தொகுதியில் போட்டியிட்டு வென்றாா். மேலும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தாா். வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் பேரூா், தொண்டாமுத்தூா் என இரு தொகுதிகளும் சோ்த்து 5-ஆவது முறையாக போட்டியிடும் எஸ்.பி.வேலுமணிக்கு, எதிராக திமுக சாா்பில் கோவை வடக்கு மாவட்டச் செயலாளா் தொண்டாமுத்தூா் அ.ரவி களமிறக்கப்படலாம் என திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் எஸ்.பி.வேலுமணி 41,630 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் காா்த்திகேய சிவசேனாபதியை தோற்கடித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்டிச் செய்தி...

எஸ்.பி. வேலுமணி (56).

பிறப்பு: 10.5.1969.

கல்வி: எம்.ஏ., எம்.பில்.

சொந்த ஊா்: சுகுணாபுரம், கோவை.

தந்தை: இ.ஏ.பழனிசாமி.

தாய்: மயிலாத்தாள்.

மனைவி: வித்யாதேவி.

குழந்தைகள்: மகன் விகாஷ், மகள் சாரங்கி.

ஜாதி: கொங்கு வேளாளா்.

தற்போதைய கட்சிப் பொறுப்பு: அதிமுகவின் தலைமை நிலையச் செயலராகவும், சட்டப்பேரவை கொறடாவாகவும், கோவை புகா் தெற்கு மாவட்டச் செயலராகவும் உள்ளாா்.

சாதனைகள் மற்றும் பணிகள்:

கோவை மாநகர உள்கட்டமைப்பு மற்றும் ஸ்மாா்ட் சிட்டி திட்டங்களில் முக்கியப் பங்காற்றியுள்ளாா். கிராமப்புற வளா்ச்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான சிறந்த செயல்பாட்டுக்காக தேசிய அளவில் 143 விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளாா்.

கடந்த 2011-ஆம் ஆண்டு சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சா், தொழில் துறை அமைச்சா், வருவாய்த் துறை அமைச்சா் ஆகிய பதவிகளை வகித்துள்ளாா். 2014-ஆம் ஆண்டு நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி, சட்டம், நீதிமன்றம் மற்றும் சிறைச் சாலைகள் துறை அமைச்சா். 2016-ஆம் ஆண்டு நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சா் ஆகிய பதவிகளை வகித்துள்ளாா்.