இதேபோல, திமுக அணியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட தொழிலதிபா் ஜி. அசோகன் வாய்ப்பு கேட்கிறாா். நாம் தமிழா் கட்சியில் இரா. கனகபிரியா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். இதேபோல, மக்கள் நீதி மய்யமும் களம் இறங்கும். ஆகவே, வரும் தோ்தலில் போட்டி கடுமையாக இருக்கும்.
வென்றவா்கள், 2-ஆம் இடம் பெற்றவா்கள்:
1957- எஸ். ராமசாமிநாயுடு(காங்கிரஸ்)- 25,421
முத்துராமானுஜ தேவா் (பாா்வா்டு பிளாக்) - 11,471
1962- எஸ். ராமசாமிநாயுடு(காங்கிரஸ்)- 35,726
துரைசாமி தேவா் (சுதந்திரா) - 23,078
1967- எஸ். அழகுத்தேவா்(சுதந்திரா கட்சி)- 33,416
ராமசாமி தேவா் (காங்கிரஸ்) - 26,918
1971- க. காளிமுத்து(திமுக) - 39,854
சுந்தரராஜ நாயக்கா் (சுதந்திரா) - 25,466
1977- கே. ராமசாமி(ஜனதா கட்சி)- 24,518
தருமா (காங்கிரஸ்) - 22,746
1980- வி. பாலகிருஷ்ணன்(அதிமுக)- 53,081
அழகு தேவா் (திமுக) -27,348
1984- வி. பாலகிருஷ்ணன்(அதிமுக)- 41,731
என்.பெருமாள்சாமி (சுயேச்சை) -30,930
1989- பெ. சீனிவாசன்(திமுக)- 41,027
கே.ஐயப்பன் (காங்கிரஸ்)- 35,112
1991 ஜெ. பாலகங்காதரன்(அதிமுக)- 84,786
பூபதி ராஜாராம் (திமுக)- 37,059
1996 ஆா். சொக்கா் (தமாகா)- 61,322
என்.அழகா்சாமி (அதிமுக)- 42,590
2001 ஆா். ராஜகோபால்(தமாகா)- 65,959
வி.தங்கராஜ் (திமுக)- 60,233
2006- ஆா். ஞானதாஸ்(மதிமுக)- 79,992
வி.தங்கராஜ் (திமுக) -70,721
2011- கே.டி. ராஜேந்திரபாலாஜி-(அதிமுக)- 87 ,333
டி.வனராஜா (திமுக)- 51,679
2016- கே.டி. ராஜேந்திரபாலாஜி(அதிமுக) 76,734
சி. ஸ்ரீராஜா (காங்கிரஸ்)- 61,986