போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுத் தாக்கல்

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு வெள்ளிக்கிழமை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுத் தாக்கல்
போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுத் தாக்கல்

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்கு வெள்ளிக்கிழமை, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

பெரியகுளம் அருகே கைலாசநாதர் கோயில், போடி சாலை மாரியம்மன் கோயில் ஆகியவற்றில் சுவாமி தரிசனம் செய்த ஓ.பன்னீர்செல்வம், அங்கிருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்று போடி வட்டாட்சியர் அலுவலக்திற்கு ஊர்வலமாகச் சென்று, தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

தேனி மக்களவை உறுப்பினர் ப.ரவீந்திரநாத், போடி நகர அதிமுக செயலர் வி.ஆர்.பழனிராஜ்,  போடி ஒன்றிய அதிமுக செயலர் சற்குணம் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியது: போடி சட்டப்பேரவை தொகுதியில் கடந்த 2011-ல் முதல் முறையாக போட்டியிட்ட போது மக்கள் பெருவாரியான வாக்குகளை அளித்து வெற்றியை தந்தனர். அந்தத் தேர்தலில் நான் சொன்ன வாக்குறுதிகள் அரசாணைகள் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மக்களின் அடிப்படை தேவைகளை அறிந்து, அவர்களது மனம் நிறைவடையும் வகையில் நிறைவேற்றியுள்ளேன்.

போடி தொகுதி சார்பில் 2 முறை சட்டப் பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட நான், தொகுதி மக்களுக்கு முழுமையாக பணியாற்றியுள்ளேன். தற்போது மக்கள் சேவையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு களத்தில் நிறுத்தப்பட்டுள்ளேன். மக்கள் ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த 10 ஆண்டு கால ஆட்சியின் சாதனைகள் விளைவாக, அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார் அவர்.

போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்யும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com