இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சூலூரில் ரூ.10,000-க்கும் 1 ரூபாய் சில்லறையாகக் கொடுத்த முதல் வேட்பாளர்

சூலூர் சட்டப்பேரவை தேர்தலில் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் வேட்பாளராக இந்து மக்கள் கட்சியின் பொன் கார்த்திகேயன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

News image
சூலூரில் வேட்புமனு தாக்கல் துவக்கம்; ரூ.10,000-க்கும் சில்லறையாகக் கொடுத்த வேட்பாளர்
Updated On :12 மார்ச் 2021, 10:03 am

DIN

சூலூர்: சூலூர் சட்டப்பேரவை தேர்தலில் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் வேட்பாளராக இந்து மக்கள் கட்சியின் பொன் கார்த்திகேயன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழகம் முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. சூலூரில் வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் வேட்பு மனுத்தாக்கல் துவங்கியுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் அலுவலர் சாந்தி மற்றும் உதவி தேர்தல் அலுவலர் சிவக்குமார் செய்திருந்தனர். கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் சூரிய மூர்த்தி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

இந்து மக்கள் கட்சியி தமிழகம்  சார்பில் பொன். கார்த்திகேயன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவர் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் ஏழு முறை சட்டப்பேரவை தேர்தலுக்கும்,  இரண்டு முறை மாநிலங்களவைத் தேர்தலுக்கும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார். வேட்புமனு தாக்கல் பற்றி அவர் கூறியதாவது, 10,000 பொதுமக்களிடம் தலா ஒரு ரூபாய் வசூல் செய்து வேட்புமனுத்தாக்கல் பணத்தை சில்லறையாக தாக்கல் செய்ததாகவும் பொதுமக்கள் தங்கள் வாக்குகளை பணத்துக்காக விற்கக்கூடாது என்ற கருத்தின் அடிப்படையில் இவ்வாறு செய்வதாகக் கூறினார்.

இந்தத் தேர்தலில் சூலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 96 சதவீதம் இந்து மக்கள் வசிப்பதாகவும் இந்துக்களின் ஓட்டு பதிவிலேயே தான் வெல்ல போவதாக கூறினார்.

பொன் கார்த்திகேயன் தாக்கல் செய்த வேட்பு மனுவை சூலூர் சட்டப்பேரவைத் தேர்தல் அலுவலர் சாந்தி பெற்றுக்கொண்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.