தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

களைகட்டும் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை களைக் கட்டத் தொடங்கியுள்ளன.

Sales of party flags, towels, and hats are booming

மதுரை.

Published On :

தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை களைக் கட்டத் தொடங்கியுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக செய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள முன்னணி கட்சிகளான அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மேலும் பிரதான கட்சிகள் இப்போதே தங்களது கட்சி கொடி, துண்டு, அட்டை, பேட்ஜ் மற்றும் தொப்பிகளை ஆர்டர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதனால் அவற்றின் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

மொத்த வியாபார கடைகளும், பல்வேறு மாவட்டங்களுக்கு கொடிகள், பேட்சுகள், மப்ளர், துண்டு, கீ செயின்களை அனுப்பி வைக்கும் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றன.

ஒவ்வொரு கட்சிகளும் தங்களது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து மாநாடு, பொதுக்கூட்டம், பேரணி, பிரசாரம் என பணிகளைத் திட்டமிட்டு அவற்றிற்கு தேவையான கொடிகள், பேட்சுகள், கட்சித் துண்டுகள், கீ செயின்கள், தொப்பிகளை ஆர்டர் செய்து வருகின்றன.

மதுரை மாநகர் கீழ ஆவணி மூல வீதியில் அமைந்துள்ள கட்சி கொடிகளை விற்பனை செய்யும் மொத்த விற்பனை கடைகள் அரசியல் கட்சிகளை காட்டிலும் மிகப் பரபரப்பாக உள்ளன.

இங்குள்ள கடைகளில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, நாம் தமிழர், தவெக, அமமுக, தேமுதிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கான கொடிகள், வரவேற்பு அட்டைகள், தலைவர்களின் உருவங்களை கொண்ட பிளாஸ்டிக் முகமூடிகள், பேட்ஜ்கள், துண்டுகள் என அனைத்தையும் தயார் செய்து விற்பனைக்காக வைத்துள்ளனர்.

Story image

மதுரை கீழ ஆவணி மூல வீதி பேனா, பென்சில் உள்ளிட்ட எழுது பொருட்களுக்கு பெயர் போன பகுதி என்றாலும் தற்போது தேர்தலுக்கான பொருட்கள் தயாரிக்கும் பணியில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.

சோலங்கி எண்டர்பிரைசஸ் மொத்த விற்பனைக் கடையின் உரிமையாளர் வெங்கடேசன் கூறுகையில், 25 ஆண்டுகளாக இந்த கடையை நடத்தி வருகிறோம். எனது தகப்பனாருக்கு பிறகு நாங்கள் நடத்தி வருகிறோம். கட்சிகளுக்குத் தேவையான அனைத்து விதமான டிசைன்களிலும் கொடிகள் கிடைக்கும். அதே போல் விலையும் எங்களது கடையில் குறைவாக இருப்பதால் அரசியல் கட்சியினர் விரும்பி வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் 15 கட்சிகள்தான் இருந்தன. தற்போது தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.

ஆனாலும் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினரின் சின்னத்தை கொண்டு சேர்ப்பதில் எங்களது பங்கும் உண்டு. மதுரையில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு 5 கடைகள்தான் உள்ளன. கட்சியினரின் ஆர்டரின் பேரில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து வருகிறோம்.

பலர் எங்களிடம் வருவதற்கு முக்கிய காரணம் எங்களிடம் வாங்கி சென்றவர்கள் வெற்றி பெற்றதும் தொடர்ச்சியாக ராசி பார்த்து எங்களிடமே அடுத்தடுத்த தேர்தல்கள் நேரத்தில் வந்து வாங்கி செல்கின்றனர்.

Story image

இதுவரை வியாபாரம் பெரிய அளவில் இல்லை , தேர்தல் நெருங்க நெருங்க வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும் என்றார்.

இங்குள்ள கடை ஒன்றில் மேலாளராக பணி செய்யும் மணிகண்டன் கூறுகையில், 'கட்சிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் விற்பனைக்கு வைத்துள்ளோம். அனைத்து கொடிகளும் எல்லா அளவிலும் வைத்துள்ளோம். அனைத்து கட்சிகளுக்கும் தேவையான மாஸ்க், சிறிய ரவுண்ட் பேட்ஜ், வரவேற்பு அட்டை, ரிங் பேட்ஜ், துண்டு, தொப்பி ஆகியவை அனைத்தும் தற்போது தயார் நிலையில் உள்ளன.

புதிய கட்சியான தவெக கட்சிக்கான கொடிகள், விசில், மப்ளர் உள்ளிட் அனைத்தும் கிடைக்கும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி தேனி, திண்டுக்கல், சென்னை உள்ளிட் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கிறோம்.

தேர்தல் தற்போதுதான் அறிவித்துள்ளனர். 20 தேதிகளுக்கு பின்னர் வியாபாரம் விறுவிறுப்பாக இருக்கும். சென்டிமென்ட் காரணமாக எங்களிடம் தேர்தலுக்கான பொருட்களை வாங்குகின்ற கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் உள்ளனர்.

கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயார் செய்த பொருட்களே இன்னும் எங்களிடம் ஸ்டாக் உள்ளன. அவற்றையும் இந்த முறை விற்பனை செய்தாக வேண்டும் என்றார்.

பண்டல் பண்டலாக பொருட்கள் அனைத்தையும் தரம் பிரித்து அடுக்கி வைத்துக் கொண்டு நம்மிடம் உரையாடுகிறார்கள் இங்குள்ள கடைகளில் பணி செய்யும் பணியாளர்கள். அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் சாரை சாரையாக இனி இங்கே வரத் தொடங்குவர். தேர்தல் பொதுமக்களுக்கு களை கட்டுகிறதோ இல்லையோ மதுரை கீழ ஆவணி மூல வீதியில் இப்போது தேர்தல் திருவிழா தொடங்கியுள்ளது.

Summary

With the election date announced in Tamil Nadu, sales of party flags, banners, and hats have begun to pick up.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.