யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வாக்களிக்க வருபவரின் உடல்வெப்பநிலை அதிகமாக இருந்தால்?

முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி இந்திய தேர்தல் ஆணையம் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

News image
வாக்களிக்க வருபவரின் உடல்வெப்பநிலை அதிகமாக இருந்தால்?
Updated On :19 மார்ச் 2021, 6:11 am

DIN

நாட்டில் கரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெறும் தேர்தல்களுக்கு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி இந்திய தேர்தல் ஆணையம் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மே 2-ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.

இந்த நிலையில், தேர்தலின் போது கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வாக்குப்பதிவு காலத்துக்கான நெறிமுறைகள்
1. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கான அதிகபட்ச வாக்காளர்கள் எண்ணிக்கை 1500லிருந்து 1000மாகக் குறைக்கப்பட்டுள்ளது.

2. வாக்குச்சாவடி ஒரு நாளுக்கு முன்னதாக தூய்மை செய்யப்படுவது கட்டாயம்.

3. வாக்குச்சாவடி நுழைவாயிலில் உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம்.

4. வாக்காளர்களுக்கு கிருமிநாசினி வழங்குவதும் கட்டாயம்.

5. இந்தப் பணியில் தேர்தல் ஊழியர்களோ, மருத்துவ உதவியாளர்களோ, ஆஷா பணியாளர்களோ ஈடுபடுத்தப்படலாம்.

5. வாக்குச்சாவடியில் ஆண், பெண், மாற்றுத் திறானளிகள் / மூத்த குடிமக்கள் என தனித்தனியாக மூன்று வரிசைகள் இருக்க வேண்டும்.

6. வாக்காளர்களுக்கு முதல் முறை உடல்வெப்ப சோதனை நடத்தும் போது குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக வெப்பம் இருந்தால், சற்று இடைவெளி விட்டு இரண்டாவது முறையும் பரிசோதிக்க வேண்டும்.

இதிலும் உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால், அந்த வாக்காளருக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்தில் வாக்களிக்க வருமாறு கேட்டுக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.