
நாடு சுதந்திரம் பெற்றப் பிறகு 1952-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில், தற்போது 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருப்பது 16வது சட்டப்பேரவைத் தேர்தலாகும்.
தொடக்கத்தில் நாடாளுமன்றத்தைப் போல, கீழவை மற்றும் மேலவை என்று இரண்டு அவைகளைக் கொண்டு தமிழக சட்டப்பேரவை செயல்பட்டது. ஆனால், 1986-இல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். சட்ட மேலவையைக் கலைத்து உத்தரவிட்டார். அது முதல் ஓர் அவையைக் கொண்டு சட்டப்பேரவை செயல்பட்டு வருகிறது.
தமிழக சட்டப்பேரவை 234 உறுப்பினர்களைக் கொண்டது. இவர்கள் அனைவரும் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர்களாக பொறுப்பேற்கிறார்கள்.
இதுவரை தமிழகம் கண்ட முதல்வர்களும், அவர்களது பதவிக் காலம் குறித்த விவரங்களும் இங்கே..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.