அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

அரசு தொழிற் பயிற்சி மையம்: காலிப்பணியிடத்திற்கு தகுதியானவர்களிடம்  இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

அருப்புக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

Updated On :13 ஜூலை 2015, 2:17 pm

அருப்புக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் ராஜாராமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: இப்பயிற்சி நிலையத்தில் ஒவ்வொரு பிரிவிலும் பணிமனை உதவியாளர் பணி காலியாக உள்ளது. இப்பதவி இனசுழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் செய்யப்பட இருக்கிறது. இதில், மின்பணியாளா், மி்ன் பளுதூக்கி மற்றும் நகரும் படிக்கட்டு இயக்குபவர், கம்மியர், குளிர்பதனம் மற்றும் தட்பவெப்ப நிலை கட்டுப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் பணிமனை உதவியாளர் நியமிக்கப்பட இருக்கின்றனர்.

இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொழில் நுட்ப கல்வியில் பட்டயம் பெற்று முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம் ஆகும. அதோடு, 1.7.2015 அன்று எஸ்.சி, எஸ்.சி.ஏ ஆகியோருக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள்ளும்,  எம்.பி.சிக்கு 18 வயது முதல் 32 வயதிற்குள்ளும், ஓ.சி பிரிவினருக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

இப்பணியிடங்களுக்கு பெயர், முகவரி, கல்வித் தகுதி மற்றும் செல்லிட பேசி எண் ஆகிய முழு விவரங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வருகிற 31ம் தேதிக்குள் அருப்புக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிடையாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அளிக்க வேண்டும். எனவே விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதமும் அனுப்பி வைக்கப்படவும் இருக்கிறது.

எனவே இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள்  விண்ணப்பித்து பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.