அருப்புக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில காலிப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் ராஜாராமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: இப்பயிற்சி நிலையத்தில் ஒவ்வொரு பிரிவிலும் பணிமனை உதவியாளர் பணி காலியாக உள்ளது. இப்பதவி இனசுழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் செய்யப்பட இருக்கிறது. இதில், மின்பணியாளா், மி்ன் பளுதூக்கி மற்றும் நகரும் படிக்கட்டு இயக்குபவர், கம்மியர், குளிர்பதனம் மற்றும் தட்பவெப்ப நிலை கட்டுப்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் பணிமனை உதவியாளர் நியமிக்கப்பட இருக்கின்றனர்.
இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தொழில் நுட்ப கல்வியில் பட்டயம் பெற்று முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியம் ஆகும. அதோடு, 1.7.2015 அன்று எஸ்.சி, எஸ்.சி.ஏ ஆகியோருக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள்ளும், எம்.பி.சிக்கு 18 வயது முதல் 32 வயதிற்குள்ளும், ஓ.சி பிரிவினருக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.
இப்பணியிடங்களுக்கு பெயர், முகவரி, கல்வித் தகுதி மற்றும் செல்லிட பேசி எண் ஆகிய முழு விவரங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வருகிற 31ம் தேதிக்குள் அருப்புக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிடையாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அளிக்க வேண்டும். எனவே விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு கடிதமும் அனுப்பி வைக்கப்படவும் இருக்கிறது.
எனவே இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுசு ராசிக்கு... தினப்பலன்கள்!

மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்த பெண் கைது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

