ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நாளை கடைசி... ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பட்டதாரிகளுக்கு வேலை

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் & நியூட்ரிஷன்

News image
Updated On :5 ஜூன் 2018, 10:10 am

தினமணி

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் & நியூட்ரிஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் நாளை புதன்கிழமைக்குள் (ஜூன் 6) மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: இணை பேராசிரியர் - 05 
சம்பளம்: மாதம் ரூ.25,000 
வயது வரம்பு: 20.06.2018-ஆம் தேதியின் படி 30க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: ஹாஸ்பிட்டாலிட்டி & ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பாடப்பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். NHTET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு, டிரேடு தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். 

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி: 08.06.2018. நேர்முகத்தேர்வுக்கு வருபவர்கள் தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை இணைத்து சமர்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது முழு விபரங்கள் அடங்கிய பயோடேட்டாவை ஏ4 அளவு வெள்ளைத் தாளில் தயார் செய்து பூர்த்தி செய்து அத்துடன் புகைப்படம் இணைத்து ihmpusa@rediffmail.com என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.06.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ihmpusa.net/wp-content/uploads/2018/05/Advertisement-for-the-post-of-teaching-associate.pdf கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.