பேராசியர் பணி வேண்டுமா? அழைக்கிறது புதுச்சேரி ஜிப்மர்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள பேராசியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் 
பேராசியர் பணி வேண்டுமா? அழைக்கிறது புதுச்சேரி ஜிப்மர்
Published on
Updated on
1 min read


புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள பேராசியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 29 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு பயனடையவும். 

பணி: Professors

காலியிடங்கள்: 19

சம்பளம்: மாதம் ரூ.1,68,900

வயதுவரம்பு: 30.08.2019 தேதியின்படி 58 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Professors

காலியிடங்கள்: 24

சம்பளம்: மாதம் ரூ.1,01,500 - 1,67,400

வயதுவரம்பு: 30.08.2019 தேதியின்படி 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஜிப்மர் விதிமுறைப்படி தகுதி பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை The Director JIPMER என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, ஜிப்மர் கிளை, புதுச்சேரியில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை: www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அத்துடன் கட்டணம் செலுத்தியதற்கான வங்கி வரைவோலை மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Deputy Director(Admin), Admin-I Recruitment Cell, Second Floor, Administrative Block, JIPMER. Puducherry - 605 006. E-Mail: facultyrect19@gmail.com

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.jipmer.edu.in என்ற கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.08.2019

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com