​ ரூ.69 ஆயிரம் சம்பளத்தில் மத்திய பாதுகாப்புத்துறையில் வேலை 

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழில் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள சமையலர், கார்பெண்டர், சுகாதாரப் பணியாளர்,
​ ரூ.69 ஆயிரம் சம்பளத்தில் மத்திய பாதுகாப்புத்துறையில் வேலை 


மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழில் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள சமையலர், கார்பெண்டர், சுகாதாரப் பணியாளர், பிளம்பர், பெயின்டர் போன்ற 900க்கும் மேற்பட்ட தற்காலிக பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய ஆண் இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 911 (முன்னாள் இராணுவத்தினர்களுக்கு 90 பணியிடம் தனியே ஒதுக்கப்பட்டுள்ளது)

நிறுவனம்: மத்திய தொழில் பாதுகாப்புப் படை 

பணிகள் மற்றும் காலியிடங்கள் விவரம்: 
1. சமையலர் - 350 
2. காப்லர் - 13 
3. பார்பர் - 109 
4. வாஷர் மேன் - 133 
5. கார்பெண்டர் - 14 
6. ஸ்வீப்பர் - 270 
7. பெயிண்டர் - 06 
8. மேசன் - 05 
9. பிளம்பர் - 04 
10. மாலி - 04 
11. எலக்ட்ரீசியன் - 03 

சம்பளம்: மாதம் ரூ.21,700 - ரூ.69,100

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் சேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.08.2019 தேதியின்படி 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: உடற்திறன் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, எழுத்துத்தேர்வு, மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி, பொருளாதார ரீதியாக பின்தங்கிய விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://images.assettype.com/dinamani/import/uploads/user/resources/pdf/2019/9/18/CISF-Constable-Bharti-2019.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.10.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com