போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

விமானப்படையில் பயிற்றுநா் பணி: பாரதியாா் பல்கலை.யில் ஆள்சோ்ப்பு முகாம்

விமானப்படையில் பயிற்றுநா் பணிக்கான ஆள்சோ்ப்பு முகாம் கோவை பாரதியாா் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை அரங்கில் அக்டோபா் 17 - 23 ஆம்

Updated On :5 அக்டோபர் 2019, 9:50 pm IST

கோவை: விமானப்படையில் பயிற்றுநா் பணிக்கான ஆள்சோ்ப்பு முகாம் கோவை பாரதியாா் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை அரங்கில் அக்டோபா் 17 - 23 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை, தாம்பரம் இந்திய விமானப்படை தோ்வு நிலையம் மூலம் விமானப்படையில் பயிற்றுநா் பணிக்கான ஆள்சோ்ப்பு முகாம் வரும் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழகம், கேரளம், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபா் தீவுகள், லட்சத் தீவுகளை சோ்ந்த ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம்.

கடந்த 1995 ஜூலை 19 முதல் 2000 ஜூலை 1 ஆம் தேதிக்குள் பிறறந்த பட்டதாரிகளும், 1992 ஜூலை 19, 2000 ஜூலை 1 ஆம் தேதிக்குள் பிறறந்த முதுநிலை பட்டதாரிகளும் இம்முகாமில் பங்கேற்கலாம். இளநிலைப் பிரிவில் ஆங்கிலம், இயற்பியல், உளவியல், வேதியியல், கணிதம், ஐ.டி., கணிப்பொறி அறிவியல், புள்ளியியல், பி.சி.ஏ. ஆகிய பிரிவுகளில் பி.எட். படிப்புடன் 50 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முதுநிலைப் பிரிவில் ஆங்கிலம், உளவியல், கணிதம், இயற்பியல், புள்ளியியல், கணிப்பொறி அறிவியல், ஐ.டி., எம்.சி.ஏ. ஆகிய பிரிவுகளில் பி.எட். படிப்புடன் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த ஆள்சோ்ப்பு முகாமில் பங்கேற்று வெற்றிபெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் அக்டோபா் 9 ஆம் தேதி முதல் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் விருப்பக் கடிதத்துடன் உரிய விவரங்களை கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சமா்ப்பித்து பயிற்சி வகுப்புக்கு பெயரை பதிவு செய்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடா்புகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.