உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தாயார் மறைவு: அமித் ஷா இரங்கல் வி.எஸ். பாபு உடலை சுமந்து சென்றார் முதல்வர் விஜய்!ஒரே நேரத்தில் பணியாளர்கள் ராஜிநாமா செய்தனரா? வழிகாட்டுதல் தமிழ்நாடு விளக்கம்திருப்பரங்குன்றம் தீபம்! தேவைப்பட்டால் துணை ராணுவத்தை பயன்படுத்தலாம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற அனுமதி! உச்ச நீதிமன்றத்தின் முக்கிய நிபந்தனைகள்!!திருப்பரங்குன்றம்: நிபந்தனையுடன் தீபமேற்ற உச்சநீதிமன்றம் அனுமதிகாவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்முதல்வர் விஜய் தலைமையில் நவ. 25-இல் முதலீட்டாளர்கள் மாநாடு!

29 ஆண்டுகளுக்குப் பின்... டெஸ்ட் வெற்றி இல்லாமல் ஆண்டை நிறைவு செய்த இலங்கை அணி!

ஒரு டெஸ்ட் போட்டியில்கூட வெற்றி பெறாமல் 2026-ஐ நிறைவு செய்த இலங்கை அணியைப் பற்றி...

இலங்கை அணியினர்.

Updated On :

நடப்பாண்டில் ஒரு டெஸ்ட் போட்டியில்கூட வெற்றி பெறாமல் 2026-ஐ இலங்கை அணி நிறைவு செய்துள்ளது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. பாகிஸ்தான் - இலங்கை இடையேயான முதல் போட்டி சமனில் முடிவடைந்த நிலையில் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 98 ரன்களுக்கும் பாகிஸ்தான் 325 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.

அதனைத் தொடர்ந்து 227 ரன்கள் பின்னிலையுடன் ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணி அணி இரண்டாம் இன்னிங்ஸில் 316 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால், இலங்கை அணிக்கு 90 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இரண்டாம் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 13 ஓவர்களில் 90/2 ரன்கள் எடுத்து இலக்கைக் கடந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றியைப் பெற்று, டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியது.

2026 ஆம் ஆண்டில் இலங்கை அணிக்கு கடைசி டெஸ்ட் போட்டியான ராவல்பிண்டி டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணி தோல்வியைத் தழுவியது. இதன்மூலம், நடப்பு காலண்டர் ஆண்டில் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இலங்கை அணி 3 போட்டிகள் சமனிலும், மூன்று போட்டிகள் தோல்வியையும் தழுவி வெற்றியே இல்லாமல் ஆண்டை நிறைவு செய்துள்ளது.

கடந்த 1997 ஆம் ஆண்டு ஒரு வெற்றிகூட இல்லாமல் டெஸ்ட் தொடரை இலங்கை அணி நிறைவு செய்திருந்த நிலையில், 29 ஆண்டுகள் கழித்து நடப்பாண்டிலும் இலங்கை அணி பரிதாபமான நிலையில் ஆண்டை நிறைவு செய்துள்ளது.

Summary

Sri Lanka have gone through the entire 2026 calendar year without winning a single Test match, a drought not seen since 1997.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.