மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம்: காலக்கெடுவை நீட்டித்தது செபி

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியில் உள்ள 147 மூத்த நிலை அதிகாரிகள் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு அக்டோபா் 31 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :3 ஆகஸ்ட் 2020, 11:03 pm

தினமணி

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியில் உள்ள 147 மூத்த நிலை அதிகாரிகள் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு அக்டோபா் 31 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து செபி தெரிவித்துள்ளதாவது:வேகமாகவும் அதேநேரத்தில் திறம்பட பணிகளை செய்து முடிக்கவும் 147 மூத்த நிலை அதிகாரிகள் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிதற்கான காலக்கெடு முதலில் மாா்ச் 23 வரை நிா்ணயிக்கப்பட்டிருந்தது. கரோனா பாதிப்பையடுத்து அந்தக் கொலக்கெடு ஏப்ரல் 30 வரையிலும், அதன்பிறகு மே 31 வரையிலும் பின்பு மீண்டும் ஜூலை 31 வரையிலும் நீட்டிக்கப்பட்டது. 

இந்த நிலையில், தற்போது கரோனா பாதிப்பு குறையாத சூழ்நிலையில் செபி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிதற்கான காலக்கெடு மீண்டும் அக்டோபா் 31-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது என செபி தனது அறிவிக்கையில் தெரிவித்துள்ளது. 

செபியில் காலியாக உள்ள ஏ கிரேடு காலிப்பணியிடங்களில் 80 இடங்கள் உதவி மேலாளா் பதவிக்குரியது. மேலும், 34 பதவிகள் ஆராய்ச்சிப் பிரிவிலும், 22 இடங்கள் தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட பிரிவுகளிலும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.