விண்ணப்பித்துவிட்டீர்களா? அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் வேலை
அனைவராலும் எய்ம்ஸ் என அழைக்கப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 3803 நர்சிங் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


அனைவராலும் எய்ம்ஸ் என அழைக்கப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 3803 நர்சிங் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் பணி அனுவமும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 18 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 3803
பணி: Nursing Officer
தகுதி: பி.எஸ்சி நர்சிங் முடித்தவர்கள் அல்லது பொது நர்சிங் பிரிவில் டிப்ளோமா முடித்து மாநில, மத்திய நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9300-34800+தர ஊதியம் ரூ.4600 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1500-ம், மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.1,200 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?: ஏய்ம்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.aiimsexams.org இன் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.08.2020
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.aiimsexams.org/pdf/Advertisement%20NORCET%20-%2004-08-2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...