மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

Canara Bank Recruitment 2020: கனரா வங்கியில் ஸ்பெஷலிஸ்ட்  அதிகாரி பணி

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள 220 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
கனரா வங்கி
Updated On :2 டிசம்பர் 2020, 9:50 am

தினமணி


பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள 220 ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். CB/RP/2/2020

பணி: Specialist Officers

காலியிடங்கள்: 22

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

1. Backup Administrator JMGS-I 
2. Extract, Transform & Load (ETL) Specialist - 05
3. BI Specialist JMGS-I - 05
4. Antivirus Administrator JMGS-I - 05
5. Network Administrator JMGS-I -  10
6. Database Administrator JMGS-I - 12
7. Developer/ Programmers JMGS-I - 25
8. System Administrator JMGS-I - 21
9. SOC Analyst JMGS-I - 04
10. Manager – Law MMGS-II - 43
11. Cost Accountant MMGS-II - 01
12. Chartered Accountant - MMGS-II - 20
13. Manager – Finance -MMGS-II - 21
14.Information Security Analyst MMGS-II - 04
15. Ethical Hackers & Penetration Testers MMGS-II - 02
16. Cyber Forensic Analyst MMGS-II - 02
17. Data Mining Experts MMGS-II - 02
18. OFSAA Administrator MMGS-II - 02
19. OFSS Techno Functional MMGS-II -05
20. Base 24 Administrator MMGS-II - 02
21. Storage Administrator MMGS-II - 04
22. Middleware Administrator MMGS-II - 05
23. Data Analyst MMGS-II - 02
24 Manger - MMGS-II - 13
25. Senior Manager  MMGS-II - 01

சம்பளம்: JMGS-I பணிகளுக்கு மாதம் ரூ.23,700 - 42, 020, MMGS-II பணிகளுக்கு மாதம் ரூ.31,705 - 45, 950, MMGS-III பணிகளுக்கு மாதம் ரூ.42,020 - 51,490 

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று 3 அல்லது 5 ஆண்டு சட்டப்படிப்பை முடித்து 3 ஆண்டு வழக்குரைஞர் பணி அனுபவம், Cost Account முடித்து 3 ஆண்டு பணி அனுபவம், Chartered Accountant முடித்து 2 ஆண்டு பணி அனுபவம், MBA(Finance) அல்லது நிதியியல் பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் மற்றும் கணினி அறிவியல், பொறியியல் துறையில் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பவியல், அறிவியல் போன்ற திறைகளில் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு: 01.10.2020 தேதியின்படி, JMGS-I பணிகளுக்கு 20 முதல் 30க்குள்ளும், MMGS-II பணிகளுக்கு 22 முதல் 35க்குள்ளும், MMGS-III பணிகளுக்கு 25 முதல் 38 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:  நேர்முகத் தேர்வு, குழு விவாதம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேவைப்படும் பட்சத்தில் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்தப்படலாம்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு 2021 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.canarabank.comஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.12.2020

மேலும் விவரங்கள் அறிய https://www.canarabank.com/media/10040/RP-2-2020-Specialist-Officers-Web-Publication-English.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.