மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ரூ.57,700 சம்பளத்தில் தமிழக அரசில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் புதியதாக 22 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான (மீன்வள அறிவியல் புலம்) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :10 டிசம்பர் 2020, 8:25 am

தினமணி


தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் புதியதாக 22 உதவிப்பேராசிரியர் பணியிடங்களுக்கான (மீன்வள அறிவியல் புலம்) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 2021 ஜனவரி 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.01/2020

நிறுவனம்: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம்

பணியிடம்: நாகப்பட்டினம்

பணி: உதவிப்பேராசிரியர்

காலியிடங்கள்: 22

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Aquaculture - 07
2. Fish Processing Technology - 02
3. Fishing Technology and Fisheries Engineering - 03
4. Aquatic Environment Management - 03
5. Fisheries Biology and Resource Management - 03
6. Fish Pathology and Health Management - 02
7. Fisheries Extension - 01 
8. Fisheries Economics - 01

சம்பளம்: மாதம் ரூ.57,700 - 1,82,400

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் B.F.Sc. முடித்து முதுகலை பட்டம் பெற்று முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.2000. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை நிதி அலுவலர், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்-611 002 என்ற பெயரில் நாட்டுமையாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் இருந்து பெறப்பட்ட, நாகப்பட்டினத்தில் செலுத்தத்தக்க வரைவோலையாக எடுத்து செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
“பதிவாளர், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்-611 002”

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.01.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.tnjfu.ac.in/downloads/carrers/ANNEXURE,%20INSTRUCTIONS%20&%20TERMS%20AND%20CONDITIONS.pdf மற்றும் https://www.tnjfu.ac.in/downloads/carrers/TNJFU%20AP%20ADVERTISEMENT.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.