இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தில்லி ஐஐடி-ல் இளநிலை உதவியாளர் வேலை

தில்லி ஐஐடி - இல் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

News image
Updated On :19 நவம்பர் 2020, 10:07 am

தினமணி


தில்லி ஐஐடி - இல் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். E-11/16/2020(DR)

பணி: Junior Assistant

காலியிடங்கள்: 18

சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100

வயதுவரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்எஸ் ஆபிஸில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சு மற்றும் பணி அனுபவம் இருந்தால் விரும்பத்தக்கது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் கணினி திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் கலந்துகொள்பவர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.  எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.iitd.ac.in/jobs  என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.12.2020

மேலும் விவரங்கள் அறிய www.iitd.ac.in/jobs  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.