இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு: தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் 10 உதவி பொறியாளர்(சிவில்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

News image
Updated On :20 நவம்பர் 2020, 8:42 am

தினமணி



தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் 10 உதவி பொறியாளர்(சிவில்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.A2/78/2018

பணியிடம்: சென்னை

பணி: Assistant Engineer(Civil)

காலியிடங்கள்: 10

சம்பளம்: மாதம் ரூ.36,400 - 1,15,700

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் அல்லது சிவில் மற்றும் கட்டமைப்பு பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகையை அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பதிவு கட்டணம்: அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களும் ரூ.400 செலுத்த வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:  எசி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களை தவிர மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களும் தேர்வு கட்டணமாக ரூ.400 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.tahdco.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.12.2010
 
மேலும் விரிவான விவரங்கள் அறிய https://tahdco.onlineregistrationform.org/TAHDCODOC/Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.