மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

என்ஐடி-ல் நூலகர், டெக்னிக்கல் அதிகாரி வேலை

வாரங்கல் என்ஐடி-இல் காலியாக உள்ள புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :23 நவம்பர் 2020, 5:30 am

தினமணி

வாரங்கல் என்ஐடி-இல் காலியாக உள்ள புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.Admin.2/2020

பணி: Scientiffic Officer/Technical Officer
காலியிடங்கள்: 08
தகுதி: பொறியியல் துறையில் CSE, Mechanical, Instrumentation, EEE, ECE போன்ற பிரிவுகளில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி: SAS Officer
காலியிடங்கள்: 02
தகுதி: Physical, Sports Science பாடப்பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Super-intending Engineer
காலியிடங்கள்: 01
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Deputy Librarian
காலியிடங்கள்: 01
தகுதி: நூலக அறிவியல் பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்று நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள்  நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதுகுறித்து பெயர்பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.nitw.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2020

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.