தொழில்நுட்ப உதவியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப உதவியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு



தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். MoES/NCCR/Rectt.PS/31/2021

மொத்த காலியிடங்கள்: 81 

நிர்வாகம் : தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் (NCCR) 
பணி: Project Scientist- I  - 29
பணி: Project Scientist- II - 35
பணி: Project Scientist- III - 01
பணி: Senior Research Fellow - 04
பணி: Technical Assistant - 01
பணி: Field Assistant - 09

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 32 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். பொறியியல் துறையில் பி.இ, பி.டெக் மற்றும் முதுநிலை பட்டம் பெற்றிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உதவியாளர் பணிக்கு விண்ணப்பவர்கள் அறிவியல் துறையில் பட்டம் அல்லது பொறியியல் துறையில் டிப்ளமோ  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.20,000 முதல் அதிகபட்சம் ரூ.78,000 வரை வழங்கப்படும். 

விண்ணப்பிக்கும் முறை : https://www.nccr.gov.in/NRect2021/nrect1.htm  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, துறைவாரியானத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.08.2021 

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 24.08.2021

மேலும் விபரங்கள் அறிய www.nccr.gov.in அல்லது https://www.nccr.gov.in/NRect2021/NccrFullFinal.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com