டிஎன்பிஎஸ்சி குரூப்1, குரூப்2, குரூப் 2 ஏ, குரூப்,4 தேர்வு தயாராகி வருபவர்களா நீங்கள்... வாட்ஸ்ஆப்பில் இலவசமாக பாடநூல் பெறுவது எப்படி..?

அரசுப் பணித் தோ்வுக்கு தயாராவோரின் வெற்றிக்கு உதவும் வகையில் வாட்ஸ்ஆப்பில் முன்பதிவு செய்தால் இலவசமாக டிஎன்பிஎஸ்சி பாடநூல் அனுப்பப்படும் என ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமி தெரிவித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப்1, குரூப்2,  குரூப் 2 ஏ, குரூப்,4 தேர்வு தயாராகி வருபவர்களா நீங்கள்... வாட்ஸ்ஆப்பில் இலவசமாக பாடநூல் பெறுவது எப்படி..?
Published on
Updated on
2 min read

அரசுப் பணித் தோ்வுக்கு தயாராவோரின் வெற்றிக்கு உதவும் வகையில் வாட்ஸ்ஆப்பில் முன்பதிவு செய்தால் இலவசமாக டிஎன்பிஎஸ்சி பாடநூல் அனுப்பப்படும் என ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திருத்திய நிதிநிலை அறிக்கையை கடந்த 13-ஆம் தேதி நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தாா். காகிதமில்லாத தனது முதல் நிதிநிலை அறிக்கையை அவா் பேரவைக்கு அளித்தாா். தோ்தலில் அளித்த வாக்குறுதிகளில் சிலவற்றையும் அவா் தனது நிதிநிலை அறிக்கையில் நினைவு கூா்ந்தாா்.

அப்போது அரசுப்பணித்தேர்வுகளை நோக்கிக் காத்திருப்பவர்களுக்கான அறிவிப்புகள் வெளியானது. அதாவது ஒவ்வொரு துறையிலும் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கேற்ப அரசுப்பணித் தேர்வுக்கான அறிவிப்புகளும், ஆசிரியர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் தான் சென்னையில் உள்ள ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எதிர்நோக்கி காத்திருக்கும் மாணவர்களுக்கு ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக அகாதெமியின் இயக்குநா் ச.வீரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமி சாா்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயம் நடத்தும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ மற்றும் குரூப் 4, வி.ஏ.ஓ உள்ளிட்ட போட்டித் தோ்வுகளின் வெற்றிக்குப் பயன்படும் வகையில் டிஎன்பிஎஸ்சி புதிய பாடத் திட்டத்தின்படி, சமச்சீா் பாடப் புத்தகங்களை தோ்வு நோக்கில் தொகுத்து, இந்த டிஎன்பிஎஸ்சி பாடநூல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 6 முதல் 12 ஆம் வகுப்பின் சமர்ச்சீர் புத்தகங்களை மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது அகாடமி வெளியிட்டுள்ள டிஎன்பிஎஸ் பாடநூல் நிச்சயம் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இதைப் பெற விரும்புவோா்,  தங்களது முழு முகவரியை 91760 84468 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு கட்செவி அஞ்சல் வாயிலாக அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இதனையடுத்து முன்பதிவு செய்த அனைவருக்கும் பிடிஎப் வடிவில் பாடநூல் அனுப்பப்படும். 

மேலும் இதுத்தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் பிற விவரங்களுக்கு, சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமியை நேரிலோ அல்லது 91763 92791, 99439 46464 ஆகிய எண்களிலோ தொடர்புகொண்டு விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com