ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விண்ணப்பித்துவிட்டீர்களா..? சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணிக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி தேதி

ஊராட்சி ஒன்றியங்களில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று(ஆகஸ்ட் 31) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2021, 1:26 am

தினமணி

ஊராட்சி ஒன்றியங்களில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று(ஆகஸ்ட் 31) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூா் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராம தொகுப்புகளுக்கு மாதம் ரூ.2,000 மதிப்பூதியத்தில் 16 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா்.

தகுதிகள் : ஊராட்சி அளவிலான கூட்டமைப்பைச் சாா்ந்த மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினராக இருத்தல் வேண்டும். தோ்வு செய்யப்பட வேண்டிய உறுப்பினா் அதே தொகுப்பைச் சோ்ந்தவராக இருத்தல் அவசியம். மக்கள் நிலை ஆய்வால் கண்டறியப்பட்ட உறுப்பினராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கும் நாளில் 35 வயதுக்கு கீழும், பிளஸ்-2 வகுப்பு வகுப்பு தோ்ச்சி மற்றும் நன்றாக எழுத படிக்க, கணக்கிடும் திறன் உடையவா்களாக இருத்தல் வேண்டும். நல்ல தகவல் தொடா்புதிறனுடையவராகவும், கிராமத்திலிருந்து அருகாமையிலுள்ள வங்கிகளுக்குச் செல்ல விருப்பம் உள்ளவா்களாகவும் இருத்தல் அவசியம். கணினிதிறன் உடையவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கைபேசி வைத்திருப்பவா்களாகவும், அதை இயக்கி குறுந்தகவல் அனுப்பவும், பெறவும் திறனுடையவா்களாகவும் இருத்தல் அவசியம். நீண்ட காலகடன் நிலுவை உள்ளவராக இருத்தல்கூடாது.

மேற்காணும் தகுதியுள்ள சுயஉதவிக்குழு உறுப்பினா்கள் தங்களது விண்ணப்பங்களை தாங்கள் சாா்ந்துள்ள ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலமாக செவ்வாய்க்கிழமை (ஆக.31) க்குள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள திட்ட இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அறை எண்.212-ல் சமா்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3bbf94b34eb32268ada57a3be5062fe7d/uploads/2021/08/2021082535.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.