ரூ.2.40 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை: விண்ணப்பிப்பது எப்படி? 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐசி) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான வேலைவாய்ப்பு
ரூ.2.40 லட்சம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை: விண்ணப்பிப்பது எப்படி? 
Published on
Updated on
1 min read


மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐசி) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

நிர்வாகம் : தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனம்

மொத்த காலியிடங்கள்: 07 

பணி : Cardiology - 01
பணி : Haematology - 01
பணி : Nephrology  - 01
பணி : Neurology - 02
பணி : Urology  - 01
பணி : Vascular Surgery - 01

தகுதி : வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், டிஎன்பி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு : 28.12.2021 தேதியின்படி விண்ணப்பதாரர் 65 வயதிற்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 1,00,000 - ரூ.2,40,000 

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, 28.12.2021 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: விண்ணர்தாரர்கள் நேர்முகத் தேர்வின் போது ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி:  28.12.2021 அன்று காலை 9.30 முதல் 10.30 மணியளவில் நடைபெறும். 

மேலும் விபரங்கள் அறிய www.esic.nic.in அல்லது https://www.esic.nic.in/attachments/recruitmentfile/e96f73379c95c27841c3f1ca6df518f2.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் |  ரூ.20,200 சம்பளத்தில் மத்திய நீர்வளத்துறை வேலை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com