ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் (CDS-I) 2021 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள ஏர் ஃபோர்ஸ், கடற்படை போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்
மொத்த காலியிடங்கள்: 341
காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பிரிவுகள் விவரம்:
1. இந்திய ராணுவ அகாடமி, டேராடூன் - 100
2. இந்தியன் நேவல் அகாடமி, எஜிமலா - 22
3. விமானப்படை அகாடமி, ஹைதராபாத் - 32
4. அதிகாரிகளின் பயிற்சி அகாடமி, சென்னை - 170
5. அதிகாரிகள் பயிற்சி அகாடமி, சென்னை - 17
இதற்கு விண்ணப்பிக்கலாம் | ரூ.40,000 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை: விண்ணப்பிக்கலாம் வாங்க!
தகுதி : ஐஎம்ஏ மற்றும் அதிகாரிகளின் பயிற்சி அகாடமி அங்கீகாரம் பெற்ற பல்கலையில் பட்டம் பெற்றவர்கள், இந்திய கடற்படை அகாடமி அங்கீகாரம் பெற்ற பல்கலைக் கழகம், பொறியியல் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள். ஏர் ஃபோர்ஸ் அகாடமி அங்கீகாரம் பெற்ற பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு : 20 - 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : https://upsconline.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் : பொது, ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும். மற்ற பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.01.2022ம்
மேலும் விபரங்கள் அறிய www.upsc.gov.in அல்லது https://www.upsc.gov.in/sites/default/files/Notif-CDS-I-2022-Eng-221221.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | தமிழக அரசில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் வேலை: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!