தமிழக அரசில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் வேலை: பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
By | Published On : 25th December 2021 03:13 PM | Last Updated : 25th December 2021 03:13 PM | அ+அ அ- |

தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் தொகுப்பு ஊதியத்தில் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் பணிபுரிய கீழ்வரும் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Lab Technician/Sputum Microscopist
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் எம்எல்டி அல்லது அதற்கு இணையான பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Tuberculosis Health Visitor(TBHV)
காலியிடங்கள்: 07
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: பட்டதாரிகள் அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் சான்றிதழ் பெற்றிருப்பதுடன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 மாத கணினி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
இதையும் படிக்க | விண்ணப்பித்துவிட்டீர்களா..? - Border Roads நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!
பணி: Accountant
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.10,000
தகுதி: வணிகவியல் பிரிவில் பட்டம், 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 65க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: துணை இயக்குநர் மருத்துவப் பணிகள்(காசநோய்), அறை எண் 413, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம் மாவட்டம் - 636 001
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.01.2022
மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2021/12/2021122088.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதையும் படிக்க | ரூ.40,000 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை: விண்ணப்பிக்கலாம் வாங்க!