கல்லூரியில் பேராசிரியர் வேலை: விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?

நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்லூரியில் பேராசிரியர் வேலை: விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?
Published on
Updated on
1 min read


 
நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் பஷன் டெக்னாலஜி
மொத்த காலியிடங்கள்: 190

தகுதி: பேஷன் டிசைன், ஜூவல்லரி டிசைன், புட்வியர் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், லெதர் டிசைன், ஸ்பேஸ் டிசைன், பிலிம் டிசைன், கம்ப்யூட்டர் சயின்ஸ், மாஸ் கம்யூனிகேசன், அட்வர்டைசிங் போன்ற பிரிவில் எம்.எஸ்சி., முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள. 

வயதுவரம்பு: 31.1.2022 தேதியின்படி, 40க்குள் இருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தில்லி, மும்பை, பெங்களூரு, புவனேஸ்வர், போபால், கௌகாத்தி.

விண்ணப்பிக்கும் முறை: www.cmsnift.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1180. பெண்கள், எஸ்சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2022

மேலும் விபரங்கள் அறிய www.cmsnift.com/pages/app_asst_prof/ap_reg.aspx என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com