SBI வங்கி பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? - விண்ணப்பிக்க இன்றே கடைசி

SBI வங்கி பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? - விண்ணப்பிக்க இன்றே கடைசி

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 1226 அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டிருந்து. 
Published on

பொதுத்துறை வங்கிகளில் முதன்மை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 1226 அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டிருந்து. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு இன்று(டிச.29) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க தகுதி இருந்தும் விண்ணப்பிக்காதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து பயனடையுங்கள். 

வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்த அறிவிப்பு விவரம்: 
விளம்பர எண். CRPD/CBO/2021-22/19

பணி: Circle Based Officer

காலியிடங்கள்: 1226

சம்பளம்: மாதம் ரூ.36,000 - 63,840

தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.12.2021 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி 2022 இல் நடைபெறும். எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு கடிதம் 12.01.2022 தேதிக்கு பின்னர் இணையதளத்தில் வெளியிடப்படும்.

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை, திருநெல்வேலி தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.750 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.12.2021

மேலும் விவரங்கள் அறிய www.bank.sbi/careers என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com