திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலையில் பேராசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
மொத்த காலியிடங்கள்: 26
பணி: பேராசிரியர் - 08
பணி: இணை பேராசிரியர் - 13
பணி: உதவி பேராசிரியர் - 05
தகுதி: இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், புவியியல், வரலாறு, தோட்டக்கலை, சட்டம், கணிதம் உள்ளிட்ட 18 பிரிவுகளில் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் சம்மந்தப்பட்ட முதுநிலை மற்றும் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதற்கு விண்ணப்பிக்க | ரூ.20 ஆயிரம் சம்பளத்தில் சமூக நல அலுவலகத்தில் வேலை வேண்டுமா?
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ. 500 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://cutn.ac.in/careers என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Joint Registrar Recruitment Cell,
Central University of Tamil Nadu,
Neelakudi Campus, Thiruvarur - 610 005.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.01.2022
மேலும் விபரங்கள் அறிய https://cutn.ac.in/careers என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.