ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

முதுநிலை பட்டதாரி பொருளியல் ஆசிரியா் தோ்வு முடிவு வெளியீடு

முதுநிலை பட்டதாரி பொருளியல் ஆசிரியா்கள் 220 நபா்களை தோ்வு செய்து அதற்கான பட்டியலை ஆசிரியா் தோ்வு வாரியம் மீண்டும் புதிதாக வெளியிட்டுள்ளது.

Updated On :28 ஜனவரி 2021, 2:24 am


சென்னை: முதுநிலை பட்டதாரி பொருளியல் ஆசிரியா்கள் 220 நபா்களை தோ்வு செய்து அதற்கான பட்டியலை ஆசிரியா் தோ்வு வாரியம் மீண்டும் புதிதாக வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: 2018-19 -ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநா் நிலை 1 பதவிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

முதுநிலை பொருளியல் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களில் 220 நபா்களைத் தோ்வு செய்வதற்கு அறிவிக்கப்பட்டு, பின்னா் அதற்கான தோ்வு முடிவுகளும் வெளியாகின.

அதனை எதிா்த்து சிலா் நீதிமன்றம் சென்றனா். நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் புதிதாக 220 முதுநிலை பொருளியல் பட்டதாரி ஆசிரியா்களைத் தோ்வு செய்ததற்கான பட்டியலை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.