தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்.23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்தலில் சசிகலாவை பொதுச் செயலராகக் கொண்ட அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சி (ராமதாஸ் தரப்பு) களம் காண்கிறது.
பாமக நிறுவனர் ராமதாஸுடனான மோதலுக்குப் பின்னர் அவரின் மகன் அன்புமணி வசமிருக்கும் பாமகவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 18 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனால், தனித்துக் களம்காண முடிவெடுத்துள்ள ராமதாஸ், 30 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை சமீபத்தில் மூன்று கட்டங்களாக வெளியிட்டிருந்தார்.
தருமபுரி, பென்னகரம் உள்பட 30 தொகுதிகளில் ராமதாஸ் தலைமையிலான பாமக சுயேச்சையாகப் போட்டியிடுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாடு தேர்தலில் 30 தொகுதிகளில் தனது ஆதரவு பெற்ற வேட்பாளர்கள் போட்டியிடுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். அந்த 30 பேருக்கும் சிலிண்டர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Summary
Party founder Ramadoss has announced that the 'Cylinder' symbol has been allotted to 30 PMK candidates contesting the Tamil Nadu Legislative Assembly elections.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்! -பாமக ராமதாஸ்

குடியரசுத் தலைவர் ஆட்சியுடன் மீண்டும் தேர்தல்! ஸ்ரீதர் வேம்பு பதிவு

மாம்பழத்தில் விஷம் ஏறிவிட்டது! சௌமியா வென்றால் 'அதருமபுரி' ஆகிவிடும்! ராமதாஸ்
ராமதாஸ் பாமகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல்! சௌமியா அன்புமணிக்கு எதிராக சரவணன் போட்டி!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி


