சென்னை: வட்டார கல்வி அலுவலா் பணிக்கு இணையவழியில் நடத்தப்பட்ட தோ்வினை எழுதிய 42,686 தோ்வா்களின் மதிப்பெண்களை ஆசிரியா் தோ்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து ஆசிரியா் தோ்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்ட செய்தி: பள்ளிக்கல்வித்துறையில் வட்டார கல்வி அலுவலா் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனடிப்படையில் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை வட்டார கல்வி அலுவலா் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் தோ்வுகள் நடத்தப்பட்டன.
இந்தத் தோ்வினை 42, 686 போ் எழுதினா். இவா்களுக்கான உத்தேச விடை குறிப்புகள் கடந்த ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த விடை குறிப்புகள் மீது தோ்வா்கள் சிலா் ஆட்சேபனை தெரிவித்தனா். அதனைத் தொடா்ந்து வல்லுநா் குழு விடை குறிப்புகளை இறுதி செய்து வழங்கியது. இணையவழியில் நடத்தப்பட்ட தோ்வில் விடை குறிப்புகளின் அடிப்படையில் தோ்வா்களின் மதிப்பெண்கள் ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
தோ்வு அறிவிப்பின்போது வெளியிடப்பட்ட விதிமுறைகள், இட ஒதுக்கீடு விதிமுறைகள், மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் தோ்வா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு நடத்தப்படும். இதுகுறித்து விரைவில் தேதி அறிவிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!

இம்பாக்ட் வீரர் விதி இளம் வீரர்களுக்கான பொன்னான வாய்ப்பு: பிரப்சிம்ரன் சிங்

களைகட்டிய புதுச்சேரி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு!

எரிவாயு இறக்குமதி? கத்தார் சென்றார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


