பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவில் வேலை

மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவில் நிரப்பப்பட உள்ள  பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு... மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவில் வேலை
Published on
Updated on
1 min read


மத்திய ரிசர்வ் போலீஸ் பிரிவில் நிரப்பப்பட உள்ள  பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Assistant Commanndant (Civil Engineer)

காலியிடங்கள்: 25

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை:  உடற்தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. இதனை போஸ்டல் ஆர்டர் அல்லது DIG, Group Centre, CRPF, Rampur Payable at SBI-Rampur பெயருக்கு டி.டி.யாக எடுக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ww.crpf.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனைடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்பும் கவரின் மீது Central Reserve Police Force Assistant Commanndant(Engineer/Civil) Exam, 2021 என்று குறிப்பிடவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: DIG, Group Centre, CRPF, Rampur, U.P - 244 901

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர் கடைசி தேதி: 29.07.2021

மேலும் விவரங்கள் அறிய https://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_218_1_475062021_English.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com