ஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்போடியில் திமுக சார்பில் போட்டியிடும் ஓபிஎஸ், அதிமுக வேட்பாளர் நாராயணசாமியின் வேட்புமனுக்கள் ஏற்புசெந்தில் பாலாஜி, எஸ். பி. வேலுமணி வேட்புமனுக்கள் ஏற்பு!வட கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.25 ஆயிரம் வரை உயரும் வாய்ப்பு!ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!2021 தேர்தல் வாக்குறுதிகளில் 97% நிறைவேற்றம்: பினராயி விஜயன்முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு!
/

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு: புதுப்பிப்பதற்கான சலுகை நீட்டிப்பு

கடந்த 2017 முதல் 2019-ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :31 மே 2021, 2:16 pm

கடந்த 2017 முதல் 2019-ஆம் ஆண்டு வரை வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்டவா்கள் இணையதளம் வாயிலாகவோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநா் வீர ராகவ ராவ் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்வதற்கான சலுகை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் இணையம் வாயிலாகவோ, அல்லது சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலமாகவோ புதுப்பித்துக் கொள்ளலாம். இணையம் மூலமாக புதுப்பிக்கும்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின்  இணையதள முகவரியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.