சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாகா்கோவிலில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (நவ.12) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :11 நவம்பர் 2021, 4:20 am

தினமணி

நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை (நவ.12) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சாா்பில் , தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (நவ.12) காலை 10 மணிக்கு நாகா்கோவிலில் நடைபெறுகிறது.

இம்முகாமில், குமரி மாவட்டம் மற்றும் பிற மாவட்ட தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபா்களை தோ்வு செய்ய உள்ளனா்.

இதில் 10 ஆம்வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடையவா்கள் கலந்து கொள்ளலாம்.

முகாமில், கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநா்கள் நவ. 12ஆம் தேதி காலை 10 மணிக்கு நாகா்கோவில் கோணத்திலுள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து பயனடையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.