சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை மாநகராட்சியில் மாவட்ட சுகாதார சங்கம்-திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் கீழ்வரும் 89 பதவிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு
Published on
Updated on
2 min read

சென்னை மாநகராட்சியில் மாவட்ட சுகாதார சங்கம்-திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் கீழ்வரும் 89 பதவிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்கள் 11 மாதம் ஒப்பந்த மற்றும் தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் நிரப்படுகிறது. 

மொத்த காலியிடங்கள்: 89

நிறுவனம்: பெருநகர சென்னை மாநகராட்சி (பொது சுகாதாரத்துறை)

பணி: மருத்துவ அலுவலர் - DTC -  02
பணி: மருத்துவ அலுவலர் - Medical College - 03
பணி: மருத்துவ அலுவலர் - DRTB - 01
சம்பளம்: மாதம் ரூ.45,000 வழங்கப்படும்.
தகுதி: இந்திய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட எம்பிபிஎஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேசிய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: மாவட்ட DPC திட்ட ஒருங்கிணைப்பாளர் - 02
தகுதி: எம்பிஏ மற்றும் சுகாதார நிர்வாகவியல் பிரிவில் முதுகலை டிப்ளமோ முடித்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000 வழங்கப்படும்.

பணி: மாவட்ட DRTB/HIV TB ஒருங்கிணைப்பாளர் - 01
தகுதி: அறிவியல் பிரிவில் பட்டம், 2 மாத கணினி சான்றிதழ் மற்றும் நிரந்த இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.19,000 வழங்கப்படும்.

பணி: மாவட்ட PPM ஒருங்கிணைப்பாளர் - 03
தகுதி: எம்எஸ்டபுள்யு, உளவியல் பிரிவில் எம்.எஸ்சி., தொடர்புதுறையில் ஒரு ஆண்டு களப் பணி அனுபவம் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,000 வழங்கப்படும்.

பணி: முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்(STS) - 03
தகுதி: 10, பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் அறிவியல் பிரிவில் இளநிலை பட்டம், குறைந்தபட்சம் சுகாதா துறையில் ஒரு ஆண்டு பணி அனுபவம், இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம், இரண்டு மாத கணினி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.

பணி: முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் (STLS) - 02
தகுதி: 10, பிளஸ் 2 தேர்ச்சி மற்றும் அறிவியல் பிரிவில் இளநிலைப்பட்டம், மருத்துவ கல்வி இயக்குநகரம் அங்கீகரிப்பட்ட மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், நிரந்த இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம், 2 மாத கணினி சான்றிதழ், சுகாதாரத்துறையில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.

பணி: மருந்தாளுநர் - 03
தகுதி: பி.பார்ம், டி.பார்ம் முடித்து, அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை மருந்து கிடங்கு அல்லது சுகாதார மையத்தில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.

பணி: ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் - 58
தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் மருத்துவ கல்வி இயக்குநகரம் அங்கீகரித்த மருத்துவ தொழில்நுட்ப பட்டம் மற்றும் 2 மாத கணினி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.

பணி: TB சுகாதாரப் பார்வையாளர் - 05
தகுதி: அறிவியல் பிரிவில் இளநிலைப்பட்டம், அறிவியல் பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது சுகாதாரப்பணியாளராக பணியாற்றிய அனுபவம், 2 மாத கணினி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.

பணி: கணினி இயக்குபவர்  - 01
தகுதி: 10, பிளஸ் 2, அரசு அங்கீகரிக்கப்பட்ட கணினி பட்டம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.

பணி: ஆற்றுபடுத்துநர் - DRTB மையம் - 04
தகுதி: சமூகப் பணி, சமூகவியல் உளவியல் பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.

பணி: கணக்காளர் - 01
தகுதி: வணிகவியல் பிரிவில் இளநிலைப்பட்டம், இரண்டு ஆண்டு இரட்டைப்பதிவு அனுபவம், கணக்கியல் மென்பொருளியலில் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.10,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பத்தாரர்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம் தபால் மூலமாக தெரிவிக்கப்படும். வகுப்புவாத பட்டியல் அடிப்படையில் நிரப்பப்படும். சென்னை மாவட்டத்தில் நிரந்தரமாக குடியிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தோ அல்லது  புதிதாக தயார் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
திட்ட அலுவலர் -திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்(NTEP), மாவட்ட காசநோய் மையம், 26, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, புளியந்தோப்பு, சென்னை - 600 012.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.11.2021

மேலும் விவரங்கள் அறிய www.chennaicorporation.gov.in அல்லது https://chennaicorporation.gov.in/gcc/pdf/NTEP_Application.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com