வங்கியில் வேலை வேண்டுமா? அழைக்கிறது சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா
By | Published On : 20th November 2021 12:55 PM | Last Updated : 20th November 2021 12:55 PM | அ+அ அ- |

வங்கி சேவையில் முன்னணி வங்கியாக உள்ள பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா-வில் காலியாக உள்ள 115 அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா(Central Bank of India)
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Economist - 01
பணி: Income Tax Officer - 01
பணி: Information Technology - 01
பணி: Data Scientist - 01
பணி: Credit Officer III - 10
பணி: Data Engineer III - 11
பணி: IT Security Analyst III - 01
பணி: IT SOC Analyst III - 02
பணி: Risk Manager III - 05
பணி: Technical Officer(Credit) III - 05
பணி: Financial Analyst II - 20
பணி: Information Technology II - 15
பணி: Law Officer II - 20
பணி: Risk Manager II -10
வயதுவரம்பு: ஒவ்வொரு பணிகளுக்கும் தனித்தனியான வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 20 முதல் 45 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தகுதி: இளங்கலை, முதுகலை, எம்பிஏ, எம்சிஏ, பி.எச்டி முடித்தவர்கள் சம்மந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். பணி அனுபவம் குறித்து அறிவிப்பை தெரிந்துகொள்ளவும்.
பணி: Security II - 03
பணி: Security I - 09
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 26 முதல் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் இந்திய ராணுவம் அல்லது ஏர் இந்தியா,
கடற்படை மற்றும் துணை ராணுவ படைகளில் இளநிலை அதிகாரியாக பணியாற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.175 + ஜிஎஸ்டி, மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.850 கட்டணத்துடன் ஜிஎஸ்டி சேர்த்து செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www:centralbankofindia.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.12.2021
ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 22.01.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.centralbankofindia.co.in/sites/default/files/2021-11/Notification_Recruitment_of_Specialist_Officers-2022-23.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...