சுங்கத்துறை ஆணையர் அலுவலகத்தில் குரூப் 'சி' வேலை
கர்நாடகம் மாநிலம் மங்களூருவில் உள்ள சுங்க ஆணையர் அலுவலகத்தில் குரூப் சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
கர்நாடகம் மாநிலம் மங்களூருவில் உள்ள சுங்க ஆணையர் அலுவலகத்தில் குரூப் 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.01/2021
பணி: Seaman
காலியிடங்கள்: 07
பணி: Greaser
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Tradesman
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.19,900 - 63,200
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக், டீசல் மெக்கானிக், பிட்டர், டர்னர், வெல்டர், எலக்ட்ரீசியன், இன்ஸ்ட்ரூமென்டல் மற்றும் கார்பென்டரி இதில் ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Launch Mechanic
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
பணி: Sukhani
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மூன்று ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Senior Deckhand
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.21,700 - 69,100
பணி: Engine Driver
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட சம்மந்தப்பட்ட பணியில் குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.cbec.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பின்வரும் அஞ்சல் முகவரிக்கு தபால் அல்லது விரைவுத் தபாலில் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Additional Commissioner of Customs, New Custom House, Panambur, Mangaluru- 575010
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 27.10.2021
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...