யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பது எப்படி? 

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) 247 பணியிடங்களுக்கான பொறியியல் சேவை பணிகளுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
யுபிஎஸ்சி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிப்பது எப்படி? 
Published on
Updated on
1 min read


மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) 247 பணியிடங்களுக்கான பொறியியல் சேவை பணிகளுக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், தொலை தொடர்பு போன்ற துறைகளில் பி.இ, பி.டெக் முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) 

பணி:  பொறியியல் சேவை(Engineering Services)

காலியிடங்கள்: 247 

தகுதி: பொறியியல் துறையில், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பதுடன் பட்டதாரி உறுப்பினர் தேர்வு அல்லது அசோசியேட் உறுப்பினர் தேர்வு போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: விண்ணப்பதாரர் 02.01.1992 முதல் 01.01.2001 வரையிலான காலகட்டத்தில் பிறந்தவராகவும், 21 - 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : https://www.upsconline.nic.in என்ற வலைத்தளத்தின் இணையதளம் மூலம் 20.10.2021 என்ற தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம் : பொது, ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.200, எஸ்டி, எஸ்சி, பி.டபிள்யு.டி, பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை : முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் ஆளுமைத் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி: 20.02.2021 நடைபெறும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் விபரங்கள் அறிய www.upsc.gov.in அல்லது https://www.upsc.gov.in/sites/default/files/Notif-ESEP-22-engl-220921.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com