தினமும் ரூ.375 சம்பளத்துடன் தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை வேண்டுமா..?
By | Published On : 20th August 2021 03:04 PM | Last Updated : 22nd August 2021 07:04 PM | அ+அ அ- |

தேசிய ஊரக நலத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் யோகா மற்றும் நேச்சுரோபதி பிரிவுகளில் காலியாக உள்ள சிகிச்சை உதவியாளர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: சிகிச்சை உதவியாளர் (ஆண்)
காலியிடங்கள்: 53
பணி: சிகிச்சை உதவியாளர் (பெண்)
காலியிடங்கள்: 82
வயதுவரம்பு: 18 முதல் 57க்குள் இருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா...? | தினமும் ரூ.750 சம்பளத்துடன் தமிழ்நாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து வழங்குபவர் வேலை
சம்பளம்: தினமும் ரூ.375 வழங்கப்படும். வாரத்தில் 6 நாள்கள் என தினமும் 6 மணி நேரம் வேலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி: நர்சிங் தெரபி டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நர்சிங் தெரபி டிப்ளமோ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் சராசரி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். இதுதொடர்பான அனைத்து தகவல்களும் மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnhealth.tn.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: “Director of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106 என்ற அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ண்ப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 25.08.2021
மேலும் விவரங்கள் அறிய www.tnhealth.tn.gov.in அல்லது https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21082956.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஓணம் கொண்டாடிய நடிகைகள்: புகைப்படத் தொகுப்பைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...