இந்திய யுரேனிய கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
By | Published On : 07th December 2021 10:00 AM | Last Updated : 07th December 2021 10:00 AM | அ+அ அ- |

மத்திய அரசு நிறுவனமான யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 16 போர்மேன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
நிர்வாகம் : யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (UCIL)
பணி: போர்மேன்
காலியிடங்கள்: 16
தகுதி: பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. 46,020 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.ucil.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Gen.Manager (Inst./Pers.&IRs./CP) Uranium Corporation of India Limited, (A Government of India Enterprise) P.O. Jaduguda Mines, Distt.- Singhbhum East, JHARKHAND-832102
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.12.2021
மேலும் விபரங்கள் www.ucil.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.