முகப்பு வேலைவாய்ப்பு
கடற்படையில் வேலை: செய்லர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
By | Published On : 19th December 2021 01:47 PM | Last Updated : 19th December 2021 01:47 PM | அ+அ அ- |

இந்திய கடற்படையில் செய்லர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: SAILORS (Sports Quota Entry-01/2022 Batch)
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விளையாட்டு போட்டிகள்: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவதொரு விளையாட்டில் தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று விளையாடி குறைந்தபட்சம் 3 ஆம் இடம் பிடித்திருப்பது விரும்பத்தக்கது.
சம்பளம்: மாதம் ரூ. 21,700 - 43,100
வயதுவரம்பு: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் 17 முதல் 22க்குள்ளும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 17 முதல் 21க்குள் இருக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை: காலியிடங்கள் 55
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பத்தாரரின் விளையாட்டு தகுதிகள் அடிப்படையில் இந்திய கடற்படை நடத்தும் மருத்துவத் தேர்வு மற்றும் விளையாட்டு திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.14 ஆயிரம் உதவித்தொகையுடன் ஒரு ஆண்டு பயிற்சி அளிக்கப்படும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.12.2021
இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வேலை... வேலை... வேலை... மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள்