தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு
By | Published On : 21st November 2021 01:05 PM | Last Updated : 21st November 2021 01:06 PM | அ+அ அ- |

தமிழ்நாடு பவர் பைனான்ஸ் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் 3 ஆண்டு ஒப்பந்தால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள அதிகாரி பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Chief Risk Officer
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் அனைத்து பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
தகுதி: CA, ICWA தேர்ச்சியுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpowerfinance.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Chief Financial Officer, 490 3/4, "Tufidco-Powerfin" Tower, Anna salai, Nandanam, Chennai - 600 035. E-mail ID: cfo@tnpowerfinance.com
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.11.2021