
பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் 2056 'புரபஷனரி ஆபீசா்ஸ்' பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வங்கி பணி தேர்வுக்காக காத்திருக்கும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
நிறுவனம்: பாரத ஸ்டேட் வங்கி
விளம்பர எண்.CRPD/ PO/ 2021-22/18
மொத்த காலியிடங்கள்: 2056
பணி: Probationary Officers
1. Regular Vacancy - 2000
2. Backlog Vacancy -56
சம்பளம்: மாதம் ரூ.41,960
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா.. ? | எஸ்பிஐ வங்கியில் வேலை: தேர்வு இல்லை... உடனே விண்ணப்பிக்கவும்!
வயதுவரம்பு: 01.04.2021 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு நிலைகளில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டும். அதில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://bank.sbi/careers அல்லது https://www.sbi.co.in/careers என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.10.2021
மேலும் விவரங்கள் அறிய https://bank.sbi/documents/77530/11154687/041021-Final+Advertisement+PO+21-22.pdf/61eb5452-c5e8-e057-e460-1e89486812d8?t=1633349820829 என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.