சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் (சிஎம்டிஏ) காலியாக உள்ள 25 ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Published on


சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் (சிஎம்டிஏ) காலியாக உள்ள 25 ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிர்வாகம்: சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்

பணி : ஓட்டுநர்

காலியிடங்கள்: 25

சம்பளம்: மாதம் ரூ.9,500 - ரூ.62,000 

தகுதி: 8 ஆவது தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். முதலுதவி பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உடல் தகுதிக்கான மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். 
 
வயது வரம்பு: 01.07.2021 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://cmdadirectrecruitment.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனை பதிவிறக்கம் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : பொது, ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.300, எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஓட்டுநர் திறனறிவு தேர்வு மற்றும் வாகனப்பராமரிப்பு குறித்த செய்முறைத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.10.2021

மேலும் விபரங்கள் அறிய https://cmdadirectrecruitment.in/ னும் லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com