861 காலியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு-2022; யுபிஎஸ்சி அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (யுபிஎஸ்சி) நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 861 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (யுபிஎஸ்சி) நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள 861 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) 

Exam Notice: 05/2022-CSP

தேர்வின் பெயர்: UPSC- Civil Services Examination 2022

காலியிடங்கள்: 861 

தகுதி : ஏதாவெதாரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 01.08.2022 தேதியின்படி, 21 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி எஸ்சி, எஸ்டி, ஓபிஎஸ்சி பிரிவைச் சேர்த விண்ணப்பதாரர்களுக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.56,100 + இதர சலுகைகள் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

எழுத்தேர்வானது இரு கட்டங்களாக நடத்தப்படும். முதல்கட்ட தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இரண்டாம் கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

முதல்கட்ட தேர்வு நடைபெறும் நாள்: 05.06.2022

தேர்வு மையங்கள்: தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, வேலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும். இரண்டாம் கட்ட தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண் விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிக்கும் முறை:  www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2022

மேலும் விவரங்கள் அறிய www.upsconline.nic.in அல்லது https://www.upsc.gov.in/sites/default/files/Notif-CSP-22-engl-020222F.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.